• Jul 27 2024

சந்தேகமே இல்லை..!! ராயனுடன் முட்டி மோத தயரான 'மகாராஜா'.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் தனது நடிப்பில் பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் தான் மகாராஜா திரைப்படம்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் தான் மகாராஜா திரைப்படம். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுபக்கம் தனுஷ் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தான்ராயன். இந்த படத்தில் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி , அபர்ணா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.


இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் ராயன் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் அதே திகதியில்  வெளியாக போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது உருவாகும் ராயன் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அதுபோல் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான மெரி  கிறிஸ்மஸ் திரைப்படமும் படு தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து தற்போது மகாராஜா படம் தனுசுக்கு போட்டியாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement