தமிழ் சினிமாவில் ‘சாக்லேட் பாய்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் மாதவன், தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில், அவர் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ளார். இவர் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இந்த புதிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவனுடன் இணைந்து ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியாற்றியுள்ளார்.

மேலும் படத்தின் முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, மாதவன் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்தில், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக காணப்பட்டார். இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அத்துடன் ‘ஜி.டி.என்’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மாதவனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக வழங்கியுள்ளது. இந்த புதிய போஸ்டரும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், மாதவனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!