• Jun 01 2026

LIK படம் flop ஆக்கப்பட்டதா.? வேதனையுடன் மனம் திறந்த விக்னேஷ் சிவன்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு பல தடைகளை சந்தித்தபோதும், இறுதியாக கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. புதிய தொழில்நுட்பத்துடன் லவ் பேண்டஸி கதைகளத்தில் வெளியான இந்த படம் இளைஞர்களை கவர்ந்தது.


எனினும் இந்த படத்திற்கு போதிய வசூல் கிடைக்கவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஏற்கனவே வெளியான மூன்று திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப் படமும் 100 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரதீப் ரங்கநாதனின் சினிமா கேரியரில் முதல் முறையாக இந்த படம் தோல்வியை தழுவியது. வெறும் 66 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், "நெகட்டிவ் விமர்சனங்கள்… LIK படத்தின் வசூலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நெகட்டிவ் விமர்சனங்கள் பார்வையாளர்களை படத்திற்கு வாய்ப்பு கொடுக்க விடாமல் தடுத்து, தயாரிப்பாளர்களின் கனவுகளை நசுக்குகிறது. LIK படத்தின் வசூலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு படத்தை உருவாக்குவதிலும் வெளியிடுவதிலும் இருக்கும் போராட்டங்களை பலர் பார்ப்பதில்லை. அனைத்து சவால்களையும் கடந்து வந்த ஒரு படத்திற்கு இப்படி ஒரு முடிவு கிடைத்தது வேதனையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement