• Jan 19 2025

தமது புதிய இயக்குனரின் பிறந்த தினத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்த லைக்கா ! அந்த இயக்குனர் யார் தெரியுமா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அப்பாவின் சப்போர்டுடன் உள் நுழைந்த விஜய் பல்வேறு விமர்சனங்களை தாண்டி தன்னை ஒரு பெரும் நடிகராக நிலைநிறுத்தி, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தளபதி விஜய் அவர்கள் தனது 69 வது படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியல் பணிகளில் இறங்கவுள்ளார்.

Thinakkural.lk

இவ்வாறு திரைத்துறையில் இருந்து விஜய் விலக அந்த இடத்தில் இணைகிறார் தளபதியின் மகனான ஜேசன் சஞ்சய்.தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பில் வெளிவர இருக்கும் படத்தில் அறிமுக இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார் ஜேசன் சஞ்சய்.

தந்தை விஜய்யின் துணை இல்லை.. சஞ்சய் இந்த வாரிசு நடிகரை தான் இயக்க போகிறாரா

இந்நிலையில் தனது 24வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடும் தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது லைக்கா குழுமம்.லைக்கா தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் "வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் பாதை வெற்றியாலும் முடிவில்லாத சாதனைகளாலும் நிரப்பப்படட்டும்." என்ற பதிவுடன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.



Advertisement

Advertisement