பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற பின்னர், பல முக்கிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் தான் லாஸ்லியா. இவர் தனது திறமை, அழகு, மற்றும் தனித்துவமான ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில், லாஸ்லியாவின் புகைப்பட ஷூட் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஷூட்டில் அவர் கறுப்பு நிற சேலையில் மிகவும் கவர்ச்சியாக, ஸ்டைலான நிலையில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள், அவரது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
லாஸ்லியா தனது திரையுலக வாழ்க்கையை பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

பிக்பாஸ் அனுபவத்துக்குப் பிறகு, லாஸ்லியா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். காமெடி, ரொமான்ஸ் போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே ஒரு வலுவான அடையாளத்தைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!