சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.
கூலி திரைப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளதால் இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க கமிட்டாகி உள்ளனர். அதன்படி சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றார்கள். இவர்களுடைய கேரக்டர்களும் பெயர்களும் அதிகாரபூர்வமாகவே சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கூலி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. அதன்படி கூலி படத்தில் அமீர்கான் நடிக்கின்றார் என்ற தகவல் உறுதி ஆகியுள்ளது. இது தொடர்பில் தென்னிந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி கூலி படத்தில் நடிக்க அமீர்கான் ஒத்துக் கொண்டுள்ளதாகவும் விரைவில் இதன் ஷுட்டிங்கில் அமீர்கான் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரஜினி காந்தின் உடல்நிலை காரணமாகவே தற்போது கூலி திரைப்படத்திற்கு ஒரு சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாஸில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான கூலி திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க கமிட் ஆகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!