• Oct 16 2024

கூல் சுரேஷை வில்லன் விஜயாய் மாற்றிய இணையவாசிகள்.. TTF வாசனை வச்சு செய்றாங்களே!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

இயக்குனர் செல்அம் இயக்கத்தில் யூடியூப் டிடிஎஃப் வாசனை வைத்து இயக்க இருந்த படம் தான் மஞ்சள் வீரன். இந்த படத்தின் போஸ்டர் 2021 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகின்றார் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து இயக்குனருக்கும் டிடிஎஃப் வாசனுக்கும் இடையில் மிகப்பெரிய சர்ச்சை உருவானது. இறுதியில் டிடிஎஃப் வாசன் ஆம்பளையாக இருந்தால் நேரில் வந்து பேசுமாறு இயக்குனர் சவால் விட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்திற்கு பிக் பாஸ் பிரபலம் கூல் சுரேஷ் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்றைய தினம் மஞ்சள் வீரன் படத்திற்கான பூஜைகளும் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கூல் சுரேஷிற்கு இரண்டு ஹீரோயின்கள் என்ற வகையில் பேசப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கோட் படத்தின் காட்சியை வைத்து டிடிஎஃப் வாசனையும் கூல் சுரேஷ் எடிட் பண்ணிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.


அதாவது கோட் படத்தின் கிளைமாக்ஸ் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கதாநாயகன் விஜய் மற்றும் வில்லன் விஜய் என இருவரும் வேறு வேறு கேலரியில் இருந்து பார்த்துக் கொள்வது போல் காட்சி வரும். அப்போது வில்லன் விஜய் கதாநாயகன் விஜயை பார்த்து நடனமாடுவார்.

அந்த வீடியோவை எடுத்து கதாநாயகன் விஜய்க்கு பதிலாக டிடிஎஃப் வாசனையும் வில்லனுக்கு விஜய்க்கு பதிலாக கூல் சுரேஷையும் எடிட் செய்து  வீடியோவை பகிர்ந்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது விஜய் ரசிகர்களையும் கடுப்பாகி உள்ளது.



Advertisement