நடிகர் அஜித் குமார், திரை உலகில் பல வருடங்களாக மாஸ் ஹீரோவாக இருந்து வந்தவர். எப்போதும் ரசிகர்களின் அன்பையும், வரவேற்பையும் பெறும் நடிகர், தற்பொழுது தனது தனிப்பட்ட ஆர்வங்களில் ஒன்றான ரேஸிங்கில் கவனத்தை செலுத்தி வருகிறார். அஜித்தின் வாழ்க்கை மற்றும் அவரின் துணிச்சல் ரசிகர்களுக்கு எப்போதும் உற்சாகத்தை தரும் அம்சங்களாக இருக்கிறது.

சமீபத்தில் அஜித் குமார் ரேஸிங் உலகில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே பல ரேஸிங்கில் பங்கேற்று வந்துள்ளார். அத்துடன், பல பிரபலங்கள் இவரை ரேஸிங் ராக்கில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
Listen News!