மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் இந்திய சினிமாவில் பல்வேறு பரிணாமங்களில் நடித்து வரும் நடிகருமான மோகன்லால், சமீபத்தில் அளித்த நேர்காணல் ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதில் மோகன்லால் ஒரு படத்தை தெரிவு செய்யும் போது எப்படியான கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதில் மோகன்லால் தன்மந்தரா எனும் வித்தியாசமான திரைப்படத்தில் நடிக்க மறுத்ததாகக் கூறியுள்ளார். அதற்கான காரணம் தனது மனநிலையை பாதிக்கும் வகையில் அந்த கதாபாத்திரம் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் கதாப்பாத்திரம் சிறப்பாக காணப்பட்டால் தான் அக்கதையில் நடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
மோகன்லால் தனது ஸ்டைலான நடிப்பு மற்றும் ஆழமான சிந்தனைகள் மூலம் பெயர் பெற்றவர். ‘தன்மந்தரா’ போன்ற வித்தியாசமான படத்தில் நடிக்காவிட்டாலும் அவரது தைரியமான அந்த முடிவினைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த ஆழமான கருத்துக்கள் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.
Listen News!