• Sep 19 2024

வாரிசு படத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்- அட இத்தனை கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளமையில் இருந்து பல அவமானங்கள் தடைகள் என்பவற்றைத் தாண்டி முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இப்படம் வசூலில் அள்ளிக்குவித்தது.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் இணைந்து தனது 66 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதோடு இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய்க்கு இப்படத்தில் இசையமைக்கிறார். ராஷ்மிகா, குஷ்பூ, சரத்குமார், ஷாம், பிரபு, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள். இது குறித்த தகவல்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே இப்படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது. இதன்முலம், இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement