• May 19 2024

காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சுயாதீன திரைப்பட இயக்குநராகவும் கவிஞராகவும் பன்முகத் திறமை கொண்டராகவும் விளங்குபவர் தான் லீனா மணிமேகலை.பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

இதனால் இருக்கு பல சர்வதேச விருதுகளும் கிடைத்திருக்கின்றன.மேலும் கடந்த ஜுலை 2ம் திகதி கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா‘ என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் திரையிடப்பட்டது.

இதையடுத்து, காளி போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் லீனா மணிமேகலை. நாடக பாணியிலான உருவாகி உள்ள அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் ஓரின சேர்க்கை கொடியும், மற்றொரு கையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்து மத தலைவரிடமிருந்து புகார் வந்ததை அடுத்து காளி ஆவணப்படத்தை திரும்பப்பெற வேண்டு என்று கனடாவுக்கான இந்திய தூதரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் எழுதிஉள்ளது.

மேலும், திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.காளி போஸ்டர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து நேற்று விளக்கம் அளித்த லீனா மணிமேகலை, எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருக்க விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement