• Sep 20 2024

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்பொழுது அயலான் பிரின்ஸ் மாவீரன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் பிரின்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.

அதே போல மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை அண்மையில் தான் போடப்பட்டதோடு இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி சங்கர் கமிட்டாகியுள்ளார்.


இந்த நிலையில் ‘மாவீரன்’  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 45 நாட்களில் இந்த படத்தை முடிக்க இயக்குநர் மடோன் அஸ்வின்  திட்டமிட்டுள்ளதாகவும் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டுதான் அவர் அடுத்த பணியை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் டிசம்பர் முதல் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement