• Jan 19 2025

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் குடும்பத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு போட்டியில் மிமிக்ரி செய்யும் காமெடியனாக அறிமுகமாகி, தொகுப்பாளராக வளர்ந்தார்.

தொடர்ந்து மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி உச்சத்தை தொட்டு இருக்கிறார். பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள அவரது நடிப்பில் அடுத்து அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.


இது தவிர அண்மையில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக டி.இமான் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.ஆனால் இது குறித்த எந்தவொரு விளக்கத்தையும் சிவகார்த்திகேயன் என்னும் கொடுக்கவில்லை என்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் தீபாவளி தினமாகிய இன்று சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement