• Jan 18 2025

ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க, கறிக்குழம்பு போய் சாப்பிடுங்க- தீபாவளி ஸ்பெஷலாக பிரதீப் வெளியிட்ட முக்கிய பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ம் சீசன் தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. Bully Gang பற்றி கமல் இந்த வாரம் கோபமாக பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் நேற்றைய எபிசோடை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததில் எனக்கு எந்த பங்கும் இல்லை, அது போட்டியாளர்கள் எடுத்த முடிவு தான் என கமல் தன் மீது வந்த விமர்சனங்களை சரி செய்ய மழுப்பலாக எபிசோடு முழுவதும் பேசினார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


மேலும் பிரதீப்புக்கு ரெட்காட் கொடுக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது பிரதீப் ஒரு பதிவினைப் போட்டுள்ளார். 


அதில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க, நான் சந்தோசமாக தான் இருக்கிறேன்.ட்டாசு வெடிக்கிறது என்றால் வெடியுங்க,கறிக்குழும்பு சாப்பிடுங்க லைப்பை சந்தோசமாக வாழுங்க, உங்க சரப்போட் எல்லாம் படம் பண்ணும் போது கொடுங்க என்றும் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement