• Jan 19 2025

கொட்டும் மழையிலும் வசூலை தாறுமாறாக அள்ளும் பிளாக்!பிரியா பவானி சங்கருக்கு பாராட்டு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரைப்படமான கோஹரன்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வெளியான திரைப்படம் தான் பிளாக். இந்த படம் கடந்த 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். திகில் நிறைந்த காட்சிகளோடு பல டுவிஸ்ட் வைத்து இந்த படம் நகர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் தற்போது வரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிவா மனசுல சக்தி, ராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ஜீவா. மேலும் கற்றது தமிழ், ஈ போன்ற மிகவும் ராவான சப்ஜெக்ட் படங்களையும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார். அத்துடன் டிஸ்யூம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்து மார்க்கெட் உள்ள நடிகராக தன்னை மாற்றிக் கொண்டார். இவர் நடித்த படங்களில் என்றென்றும் புன்னகை, கோ உள்ளிட்ட படங்கள் என்றைக்கும் எவர்கிரீன் படங்கள் ஆகவே காணப்படுகின்றன.

தற்போது வளர்ந்து வரும் நடிகையாக காணப்படும் ப்ரியா பவானி சங்கர் இந்த படத்திலும் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய நன்கு தமிழ் தெரிந்த மற்றும் சிறப்பாக நடக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக காணப்படுகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 திரைப்படமும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.


பிளாக் படமும் இந்த வெற்றி படங்களின் வரிசையில் இடம் பெற உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேற எந்த படங்களும் ரிலீஸ் ஆகாது என்பதால் பிளாக் படத்தின் வசூல் நாளாந்தம் அதிகரிக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், பிளாக் படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் 3.25 கோடிகளை வசூல் செய்துள்ளது. தற்போது நான்காவது நாளில் 50 லட்சம் ரூபாயை தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement