• Jan 18 2025

உருட்டு டாஸ்கில் பாய்ஸ் டீமை வெளுத்து வாங்கிய தர்ஷா? பிக் பாஸ் வைத்த ஆப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றையோடு ஒன்பது நாட்கள் ஆகுகின்றது. இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 வது நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, வழமை போல இம்முறையும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதிலும் பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு பாய்ஸ் டீமுக்கும் கேர்ள்ஸ் டீமுக்கும் இடையில் டாஸ்க்குகள் வைக்கப்பட்டு வருகின்றன.

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக 24 மணி நேரத்திற்குள் முதலாவது எலிமினேஷன் நடைபெற்றது. அதில் சாச்சனா சிக்கி வெளியேறியிருந்தார். ஆனாலும் அதன் பின்பு 5 நாள் கழித்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த முதலாவது எலிமினேஷனில் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது வெளியான முதலாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் அணியினர் 8000க்கு வெற்றி பெற்று 12000 திற்கு பொருட்களை எடுத்துள்ளதால் எனக்கு என்ன தோணுதோ அந்த பொருட்களை தான் சமைக்க கொடுப்பேன் அதை வைத்து இந்த வாரம் ஓட்டுங்கள் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளது.

இதனால் இந்த அறிவிப்பை கேட்ட பெண்கள் அணியினர் பயங்கரமாக கத்தி சந்தோஷப்பட்டார்கள். மேலும் ஆண்கள் அணியில் இருந்த தர்ஷா, பிளான் ஏ பி என்று போடத் தெரிந்த உங்களுக்கு உள்ளே யார் போகணும் என்று பிளான் போட தெரியலையா? என்று ஆண்கள் டீம் மீது பயங்கரமாக கோபப்படுகிறார். 

Advertisement

Advertisement