சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். இதனால் இவர்களுடைய கூட்டணி மீது ரசிகர்கள் பலருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்த படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , ரானா டகுபதி , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
வேட்டையன் படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் எதுவும் செய்யப்படவில்லை. இசை வெளியீட்டு விழா மட்டுமே நடைபெற்றுள்ளது. இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் போது லோகேஷ் கனகராஜ் 10ம் மேற்பட்ட youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் வேட்டையன் பட இயக்குனர் அப்படி எதுவுமே செய்யவில்லை. இரண்டு சேனல்களுக்கு மட்டுமே பேட்டி கொடுத்துள்ளார்.
ரஜினி இருக்கும்போது அப்படி எதுவும் தேவை இல்லை என இதன் தயாரிப்பு நிறுவனம் நினைத்து விட்டதா என்பதும் தெரியவில்லை. அத்துடன் வேட்டையன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்றது. முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடிகளை வசூலித்துள்ளது. வெள்ளி, சனி பெரிதாக வசூல் இல்லாத போதும் ஞாயிற்றுக்கிழமை 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்னொரு பக்கம் அமிதாப் பச்சன் இருந்தும் ஹிந்தியில் வேட்டையன் படம் எடுபடவில்லை. இந்த படம் வெளியாகி நான்கு நாட்களில் 240 கோடியை வசூலித்ததாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாகவே அறிவித்தது. ஆனாலும் இது உண்மை இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் சொல்லி உள்ளார்.
தற்போது அவர் வெளியிட்ட விபரங்களின்படி, நான்கு நாட்களில் தமிழகத்தில் 37 கோடி, வட இந்தியாவில் 1. 75 கோடி, உலகளவில் சுமார் 181 கோடியை வேட்டையன் வசூலித்துள்ளதாம். இதனால் வேட்டையன் படம் மெகா பிளாப். வட இந்தியாவிலேயே பெரிய தோல்வியை தழுவியுள்ளது.
இந்த வாரம் தமிழகத்தில் மழை என்பதால் வசூலும் இருக்காது. கோட் படத்தின் வசூலை 50 சதவீதம் கூட வேட்டையன் பெறவில்லை என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
Listen News!