• Apr 26 2024

ரம்யா கிருஷ்ணனின் தாயாரை குறி வைத்து சுட்ட கே.எஸ் ரவிக்குமார்- பதற வைக்கும் உண்மைச் சம்பவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கே எஸ் ரவிக்குமார் நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை துப்பாக்கியால் சுட்டதில் அவருடைய அம்மாவுக்கு தோல் பட்டையில் புல்லட்டு பதிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் தான் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய முத்து,படையப்பா, நாட்டாமை, பஞ்சதந்திரம் எனப் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. 


மேலும் இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய லிங்கா திரைப்படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் நாகேஷ் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "பார்த்த ஞாபகம் இல்லையோ". இப்படத்தில்  ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தில் நாகேஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.


 ஒரு முறை இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக நாகேஷ் வீட்டில் ஒத்திகை நடந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது நாகேஷின் இளைய மகனுடன் கே எஸ் ரவிக்குமார் ஒரு பொம்மை துப்பாக்கியை வைத்து ஈயத்தால் செய்த புல்லட்டை கொண்டு இலக்கை சரியாக குறிவைத்து சுட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கே இருந்த ரம்யா கிருஷ்ணனின் தாயார், தன்னுடைய கையை சரியாக குறிவைத்து சுடும்படி கூறியிருக்கிறார். கே எஸ் ரவிக்குமாரும் சுட்டிருக்கிறார். ஆனால் குறி தவறி அவரது தோள்பட்டையில் புல்லட் ஆழமாக பதிந்து ரத்தம் வந்திருக்கிறது


இதனை பார்த்து பதறியடித்து ஓடி வந்த ஆனந்த் பாபு, விரைவில் ரம்யா கிருஷ்ணனின் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கின்றார். அங்கே அவர் தோள்பட்டையில் பதிந்திருந்த புல்லட்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கியிருக்கின்றனர்.


இதனை தொடர்ந்து அன்று இரவு போலீஸார் கே எஸ் ரவிக்குமாரின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். போலீஸை பார்த்து பயந்து போயிருக்கிறார் ரவிக்குமார். ஆனால் போலீஸாரோ "பயப்படவேண்டாம். ரம்யா கிருஷ்ணனின் தாயார் இந்த சம்பவம் விளையாட்டுக்கு நடந்தது தான் என ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்" என ஒரு ஸ்டேட்மெண்ட்டை காட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டாராம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று நிம்மதியடைந்த கே எஸ் ரவிக்குமாரை அவரது தந்தை ஓங்கி அறைந்திருக்கிறார் என்பதுமு் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement