• Sep 07 2024

திரையில் தெறிக்கும் கோட்... கோட் நாயகி சினேகா வாங்கிய சம்பளம்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தளபதியின் GOAT திரைப்படம் இன்று உலகளவில் வெளிவந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸில் நம்மை ரசிக்க வைத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


நடிகை சினேகா இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் GOAT படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.


GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகை சினேகா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை சினேகா ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்  ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

Advertisement

Advertisement