• Sep 21 2023

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலன் திரைப்பட இயக்குநர்- தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாரா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் 1986ஆம் ஆண்டு வெளியான பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபல்யமானவர் தான் சித்திக். தொடர்ந்து மலையாளத்தில் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கினார். குறிப்பாக இவருடைய படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

குறிப்பாக தமிழில் இவர் இயக்கிய எங்கள் அண்ணா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து விஜய்யை வைத்து அழகிய தமிழ்மகன், சுறா என வரிசையாக தோல்வி படங்களை கொடுத்திருந்தார். இருப்பினும் காவலன் திரைப்படம் இவருக்கு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தது.


காவலன் படத்தில் பூங்காவில் தடுக்கி விழும் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்து விஜய்க்குள் இருக்கும் சிறந்த நடிகனை வெளிக்கொண்டு வந்திருந்தார் சித்திக். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவர் கடைசியாக தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும், மலையாளத்தில் பிக் பிரதர் படத்தையும் இயக்கினார். இரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறவில்லை.


இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எக்மோ கருவி துணையுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement