• Jan 19 2025

கங்குவா 5000 கோடி வசூல் உறுதி...!! எங்களை விட்ருங்கடா யப்பா என கதறிய பிரபலம்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு தற்போது பல்வேறு இடத்திலும் ப்ரோமோசன்கள் இடம் பெற்று வருகின்றன.

வரலாற்று கதை அம்சம் கொண்ட கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதாணி நடித்துள்ளதோடு வில்லன் கேரக்டரில் பாபி தியோல் நடித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கங்குவா  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஆர் ஜே பாலாஜி, போஸ்ட் வெங்கட் என்று பலர் சூர்யாவின் நடிப்பு பற்றியும் அவருடைய அரசியல் பற்றியும் பேசியிருந்தார்கள்.

அதே நேரத்தில் சூர்யாவின் தந்தையான சிவக்குமார் மேடையில் பேசும்போது சூர்யா பி.காம் முடிப்பதற்காக பெரும் பாடுபட்டதாகவும் இறுதியில் நான்கு அரியர் வைத்து ஒரு மாதிரி முடித்து விட்டதாகவும் பேசி இருந்தார். சிவகுமார் மேடையில் பேச பேச சூர்யா தலையில் கையை வைத்துக் கொண்டிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.


கங்குவா திரைப்படம் சுமார் 2000 கோடி வசூலிக்கும் என இதன் தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிக அளவில் காணப்படுகின்றது. மேலும் இந்த படத்திற்கு  டிசம்பரில் சக்சஸ் மீட் நடந்து, பான் இந்திய சாதனை படைக்கும் என்று ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கங்குவா படத்திற்கு இவர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்களை கேலி செய்யும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் ஞானவேல் ராஜா இந்த படம் பான் இந்திய சாதனை படைக்கும் என தெரிவித்த நிலையில், இன்னும் இரண்டு மாசம் இந்த தொல்லை வேறு .. இந்த  படத்தை பத்து தடவை பார்க்கிறோம். 5000 கோடி ரூபாய் வசூல் உறுதி என பதிவிட்டுள்ளதோடு இறுதியில் எங்களைவிட்ருங்கடா யப்பா எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவருடைய போஸ்டுக்கு பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement