தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு நேற்றைய தினம் விஜய் தலைமையில் விசாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேச வேண்டிய பாயிண்டுகளை பேசி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி இருந்தார் விஜய்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை ஆரம்பித்த விஜய் அதன் பின்பு அதன் கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். எனினும் இந்த கட்சி தொடர்பிலான கொள்கைகள் செயற்பாடுகள் என்ன என்பது பற்றி அப்டேட் கொடுக்காமல் இருந்தார். இதனால் பல விமர்சனங்களும் எழுந்தன.
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் இறுதியாக முதலாவது மாநில மாநாடு பலரும் வியக்கம் வகையில் விசாலை கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
சுமார் நான்கு முப்பது மணிக்கு ஆரம்பமான இந்த மாநாட்டிற்கு பல தொண்டர்கள் அதிகாலையிலேயே வந்து குவிந்து விட்டனர். அது மட்டும் இல்லாமல் வெயில் தாக்கத்தினால் 80க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததோடு மாநாட்டிற்கு வரும் வழியில் விபத்துகளில் சிக்கி தொண்டர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக ஆரம்பத்திலேயே பல பணிகள், வசதிகள் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினம் அங்கு வந்திருந்த தொண்டர்கள் கழிவு நீரை குடித்ததாகவும் இடவசதி இல்லாமல் பெட்ரோல் பங்கில் தங்கி இருந்ததாகவும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாநாடு முடிந்து திரும்பும்போது தனக்கு பரிசாக மற்றவர்கள் கொடுத்த புத்தகங்களையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். தற்போது இது தொடர்பிலான வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!