• Mar 29 2023

தன்னையும் குழந்தைகளையும் வெளியே துரத்தியதாக கூறிய மனைவி.. ரஜினி பட வில்லனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கங்கனா..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகர் எனப் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நவாசுதீன் சித்திக். இவர் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.


தனது அறிமுகப் படத்தின் மூலமாகவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந் இவர் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவரின் இரண்டாவது மனைவி ஜைனப் என்கிற அலியாவுக்கும் இவருக்கும் சமீபகாலமாகத் தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. 


இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதன் உச்சமாக அலியா தன்னையும் குழந்தைகளையும் கணவர் வீட்டை விட்டு துரத்தியதாக கூறி இருந்தார். 


இதனையடுத்து இதுவரை காலமும் மௌனமாக இருந்த நவாசுதீன் சித்திக் நேற்றைய தினம் பதிலளித்திருந்தார். அதாவது "என்னை மிரட்டி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக என் தொழிலைக் கெடுத்து அவருடைய சட்ட விரோதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், பணத்திற்காகவும் அலியா இதையெல்லாம் செய்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார். 

நவாசுதீன் இந்த விளக்கம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் நடிகை கங்கனா நவாசுதீனின் இந்த நீண்ட பதிலுக்காக அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது மட்டுமல்லாது நன்றியையும் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement