• Mar 23 2023

புஷ்பா அசைவுகளைக் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்திய அல்லு அர்ஜுன்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'புஷ்பா'. தமிழ்நாட்டில் கூட இப்படத்தின் உடைய நல்ல ஓப்பனிங்குக்கு முக்கிய காரணமாக அமைந்தது ''ஊ சொல்றியா மாமா" என்ற பாடல் பாடல் தான். இப்பாடல் ரசிகர்களை மட்டும் அன்றி பல பிரபலங்களையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. 


இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த இசை கச்சேரி ஒன்றில் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனும் பங்கேற்றிருக்கின்றார். அதாவது சர்வதேச அளவில் பிரபல DJ-வான MARTIN GARRIX தான் இந்த இசை கச்சேரியை நடத்தினார். 


இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் மேடையில் ஏறி 'ஊ சொறியா' பாடலுக்கு புஷ்பா அசைவுகளை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றார். இதனை பல ரசிகர்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து அவரின் நடனத்தை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement