சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், பரணி தனது குடும்பத்துடன் அண்ணாமலை வீட்டிற்கு வந்து திருமணத்திற்கு பத்திரிகை வைக்கின்றார். மேலும் நாங்க உங்களை தான் சொந்தமாக நினைக்கின்றோம்.. இந்த கல்யாணம் நடப்பதற்கு முக்கிய காரணமே முத்து மீனா தான்.. அவங்க ரொம்ப பெரியவங்க போல நடந்து எங்க குடும்ப பிரச்சினையை தீர்த்துட்டாங்க.. இப்பதான் நிம்மதியா இருக்கு என்று பரணி முத்து மீனாவை புகழ்கின்றார்.
அதன் பின்பு முத்து கல்யாணத்துக்கு போக்குவரத்து வசதிகளை தான் செய்வதாகவும், மீனா கல்யாண மண்டபத்தை டெக்ரேசன் ஆர்டரை தான் செய்வதாகவும் சொல்ல, ரவியும் தனது சார்பில் கல்யாணத்துக்கு ஸ்வீட் ஐட்டம் செய்து தருவதாக சொல்லுகின்றார். மேலும் முத்து மேக்கப்புக்கு ரோகினியை சொல்ல, அவரும் கட்டாயம் செய்கின்றேன் என்று சொல்லுகின்றார்.
இதை கேட்ட விஜயா, அப்படி என்றால் எல்லாமே ஓசியில செய்யப் போறீங்களா என கிண்டலடிக்கிறார். அதன் பின்பு மாப்பிள்ளையின் மாமா ரொம்ப நல்லவர் அவர் கறிக்கடை வைத்திருக்கின்றார் என்று சொல்ல, நானும் அவரை பார்க்க வேண்டும் என்று முத்து ஆசைப்படுகின்றார்.
இன்னொரு பக்கம் அருண் ஹெல்மெட் போடாமல் பைக் ஓடிய வீடியோவை முத்து வைரல் பண்ணிய நிலையில், அருணுக்கு மூன்று நாள் சஸ்பென்ஸ் ஆகுகிறார் இன்ஸ்பெக்டர்.
இதை தொடர்ந்து மீனாவை சந்தித்த வித்யா, தான் போனில் செக் பண்ணிய விஷயத்தையும் எனக்கு பிடிச்ச விஷயம் அவருக்கு பிடிக்குமா என்று தெரியவேண்டும் அதற்கு என்ன பண்ணனும் என்று கேட்க, மீனா அதற்கும் ஐடியா கொடுக்கின்றார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை ரோகிணி ஒளிந்து நின்று பார்க்கின்றார்.
மீனா போனதும் எனக்கு தெரியாமல் மீனா கூட என்ன கதைக்கிறாய் என்று ரோகிணி கேட்க, அது ரொம்ப பர்சனல் உனக்கு ஒரு நாளைக்கு சொல்லுகிறேன் என்று வித்யா சொல்லுகின்றார்.
இறுதியில் அருணின் அம்மாவை பார்க்க சீதா வீட்டிற்கு செல்கின்றார். அங்கு அருண் தன்னை மூன்று நாள் சஸ்பெண்ட் செய்ததாக சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!