• Sep 28 2025

தீவிரமடையும் பாலா- ஆதவன் மோதல்..! உண்மைகள் வெளிவருமா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகரின் வாழ்க்கையிலும் அவர்களது நடிப்பின் பின்புற கதைகள் பல தரப்பாக இருக்கின்றன. சமீபத்தில், நடிகர் ஆதவன் தனது வாழ்க்கை மற்றும் தொழில்துறையில் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். 


குறிப்பாக, அவர் காமெடியன் KPY பாலா இடையேயான ஒரு சர்ச்சையான சம்பவத்தையும் விரிவாக விவரித்துள்ளார், இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆதவன் கூறியதாவது, " பாலா அவர் மேலுள்ள அக்கறையிலேயே அவனுக்கு போன் பண்ணி, இதுல இருந்து வெளியே வந்துடுன்னு சொன்னேன்” என்றார். இதற்கு பதிலாக பாலா, “நீங்களும் என்னை பற்றி பேசி தான் சம்பாதிக்கிறீங்க” என்று பதிலளித்ததாகவும், அதுவும் ஒரு விதத்தில் “நான் பிச்சை போடுறதால தான் நீ இருக்கிறாய்” என்ற டோனில் சொன்னதாகவும் ஆதவன் கூறினார்.


எனினும் “அம்புலன்ஸ் விஷயத்தை கேட்டால் கடைசி வரை பதில் வரல” என்றும் ஆதவன் தனது கருத்தின் போது கூறியுள்ளார். இந்த செய்தி வெளியாகியதும் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. பல ரசிகர்கள் நடிகர் ஆதவனுக்கு ஆதரவாக கருத்துக்களையும் சிலர் எதிர்ப்பையும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement