• Oct 06 2024

11 நாட்களில் வசூலில் வேட்டையாடிய கல்கி ... இதுவரை வாரிக் குவித்த கோடிகள் எவ்வளவு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான திரைப்படம் தான் கல்கி 28 98 ஏடி. இந்த திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது.

கல்கி திரைப்படத்தில்  கமல்ஹாசன், திஷா பதானி , அமிதா பச்சன், தீபிகா படுகோன், பசுபதி மற்றும் ஷோபனா உள்ளிட்டபலர் நடித்துள்ளார்கள். மேலும் சில  தெலுங்கு நட்சத்திரங்கள் சிறப்பு கேரக்டரிலும் நடித்திருந்தார்கள்.

இந்த படம் வெளியானதில் இருந்து உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கல்கி படத்தை கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் கல்கி திரைப்படம் வெளியாகி 11 நாட்களைக் கடந்த நிலையில், அதன் மொத்த வசூல் 900 கோடி என தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் சில நாட்களில் 1000 கோடியை வசூலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.




Advertisement

Advertisement