• May 22 2025

ரம்பாவின் காதலும், கடந்து போன வாய்ப்பும்..! யாரும் அறிந்திடாத ரகசியத்தைப் பகிர்ந்த கலா..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 90’s காலத்தின் "Queen" என்று போற்றப்படுபவர் நடிகை ரம்பா. விஜய், அஜித், பிரபுதேவா, சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவர், இப்போதும் ரசிகர்கள் மனதில் கலர்ஃபுல் ஸ்கிரீன் ஞாபகங்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட ரம்பா, தனது வாழ்க்கையின் சில முக்கியமான கட்டங்களை உணர்ச்சி கலந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துள்ளார்.


அதில் நடிகர் கமல்ஹாசனைப் பற்றி பேசும் போது, அவரது மேன்மையை உணர்ச்சிபூர்வமாக கூறிய ரம்பா,"கமல் சார் ஒரு Library மாதிரி. Indian cinema-வில் அவர் ஒரு Legend. அவரோட 'காதலா காதலா' படத்தில் நடித்ததன் மூலம் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நனவானது என்றதுடன் நான் அவரை சந்தித்த முதல் நாளிலேயே, அவர் என்னை பார்த்ததும், 'Weight loss பண்ணனும் என்று சொல்லிட்டார். எனக்கு என்ன செய்வதுன்னே புரியல. அப்ப தான் ஒரு வகை soup குடிச்சு weight குறைச்சேன்.” என்று கூறினார்.


அவர் கூறிய விதத்தில், கமலுடன் நடித்த அனுபவம் தனது திரைத்துறையின் turning point எனவும் சொன்னார். அத்துடன், ஒரு மிகப்பெரிய வாய்ப்பு தன்னிடம் இருந்து தவறியதாகவும் ரம்பா மனம்விட்டுப் பகிர்ந்தார். அது என்னவெனில், “அஜித்தின் 'வாலி' படத்துக்கு heroine ஆக வாய்ப்பு வந்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்ட்டு." என்றார். 

தனது கணவரான இந்திரன் பற்றியும் ரம்பா இந்த நேர்காணலில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். அதன்போது, "VIP படம் பண்ணும்போது தான் என் கணவரை முதன்முறையாக பார்த்தேன். சிறிது காலம் கழித்து போனில் தொடர்பு கொண்டார். அப்போ எனக்கு அவரோட பேச ஆரம்பிச்சதும், அவரை ரொம்பவே பிடிச்சிருச்சு." என்றார் ரம்பா. 


இந்த நேர்காணல் உண்மையிலேயே அனைத்து ரசிகர்களையும் பதறவைத்த நிகழ்வாக இருந்தது. ஏனெனில் நடுவராக இருந்த கலா, இதுவரை யாரும் அறியாத ஒரு உணர்ச்சி மிகுந்த நிகழ்வை வெளிக்கொணர்ந்தார். கலா நேர்காணலின் இடையே, “ஜோடி Are You Ready என்ற நிகழ்ச்சியில் ரம்பா நடுவராக இருக்கும் போது ஒரு பெண்ணுக்கு கை இல்லை. அதைப் பார்த்ததும் ரம்பா மிகவும் மனம் புண்பட்டார். அதுக்கப்புறம் தன்னுடைய கணவரிடம் ரம்பா பேசினாங்க. உடனே அவரோட கணவர் அந்தப் பெண்ணுக்கு artificial hand வாங்கிக்கொடுத்து உதவி செய்தார். இது ரம்பா செய்த மிகப்பெரிய உதவி. இது வரை யாருக்கும் அவர் சொன்னதே இல்ல. நான் தான் முதல் முறையாக சொல்லியிருக்கேன்." என்றார். 

இந்த செய்தி வெளிவந்ததும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் "ரம்பா உண்மையான மனிதநேயப் பரிசு" என்று புகழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரம்பா, இப்போது திரையுலகில் இருந்து ஓய்வெடுத்திருந்தாலும், அவரது நிஜ வாழ்க்கை, அவரது பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றால் அனைவரையும் கவர்கின்றார்.


Advertisement

Advertisement