• May 21 2024

வெளியாகிறது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின்.. 'டவுளத்தான ரவுடி' பாடல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கொம்பன், மருது, விருமன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முத்தையா. எனினும் குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் தற்போது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கி வருகிறார். 

மேலும் இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி நடித்துள்ளார்.


காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். அத்தோடு இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வரும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.


இவ்வாறுஇருக்கையில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் பக்கா கிராமத்து நாயகனாக ஆர்யா வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது மற்றுமோர் செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தின் 'டவுளத்தான ரவுடி' என்ற பாடலின் முன்னோட்டம் ஆனது இன்று மாலை 6மணிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement