• Apr 28 2024

இதை அவரிடம் மட்டும் ஒப்படைத்து விடுங்கள்- கமலின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த அவரது ரசிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனுக்கு கம் பேக் படமாகவே அமைந்தது அவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படமே ஆகும். இப்படத்தினை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூர்யா சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்..4 வருடங்களுக்கு பிறகு வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 450 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

விக்ரம் படத்தில் இடம் பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் கமலஹாசன் எழுதி பாடியினார். இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகர் கமலஹாசன். சூட்டிங் சமயங்களிடம் இரவு நேரத்தில் ஓயாத ஒர்க்கவுட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ரசிகை ஒருவர் கமலின் ஓவியத்தை தத்துரூபமாக வரைந்து உள்ளார். இந்த ஓவியத்தை வரைய கிட்டத்தட்ட 60 மணி நேரம் ஆனதாகவும் கூறப்படுகிறது. இந்த ஓவியத்தை பார்த்த பலரும் இந்த ரசிகைக்கு வாழ்த்துக்கள் கூறி வருவதுடன் ,இந்த ஓவியத்தை கமல்ஹாசனிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே கேரளாவை சேர்ந்த கமல்ஹாசன் ரசிகர் ஒருவர் நீர்மேல் ஓவியம் போட்டு அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. நீர்மேல் மிதக்கும் கமல்ஹாசன் உருவத்தை உருவாக்கியது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வந்தது. அதேபோல் இந்த ரசிகை வரைந்த ஓவியமும் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement