• May 21 2024

தர்ஷா குப்தா சொன்னதால தான் நான் சொன்னேன் காசு எல்லாம் கொடுக்கல- சர்ச்சையில் சிக்கிய சதீஷ் வெளியிட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் யுவன் இயக்கத்தில்  நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் 'ஓ மை கோஸ்ட்'. இப்படத்தில் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.


அப்போது நடிகர் சதீஷ் பேசுகையில், நடிகை சன்னி லியோன் பாஃம்பேல இருந்து நமக்காக தமிழ்நாட்டுக்கு வந்துருக்காங்க அவங்க எப்படி ட்ரெஸ் பன்னிருக்காங்க பார்த்தீங்க...கோயம்பத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா...சும்மா சொன்னேன் என்று தர்ஷாவின் ஆடையை கிண்டலடிக்கு விதமாக பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் மற்றும் பாடகி சிம்மயி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.இதனை அடுத்து சதீஷ் ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் இதனை வேணும் என்று சொல்லல அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது தர்ஷா சொன்னாங்க சன்னிலியோன் புடவைல வந்திருக்கிறாங்க நான் இப்படி வந்திருக்கிறேன் என்று சொல்லி கவலைப்பட்டாங்க.


அதுக்கு நான் நல்ல கன்டென்டாக இருக்கே என்று சொன்னேன். அதுக்கு பிறகு இதை போய் மேடைல சொல்லுங்க என்று அவங்க தான் சொன்னாங்க. அதனால தான் சொன்னேன் மற்றும் படி பெண்களின் ஆடையை நான் குறையாக சொல்லல. அத்தோடு இது நாம பிரஃண்ஸ்சுக்குள்ள பேசின விடயம் தவறாக சித்தரிக்காதீங்க. காசு கொடுத்து ப்ரமோட் பண்ணுறீங்களா என்று எல்லாரும் போஃன் பண்ணி கேட்கிறாங்க. ஆனால் இது தர்ஷா குப்தாவின் முழுசம்மதத்துடன் தான் கூறப்பட்ட விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement