• Jan 07 2026

ஜீவானந்தத்துடன் அழுது அழுது பேசிக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, குணசேகரனுக்கு போட்டுக் கொடுத்த ஜான்சிராணி- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பங்சனுக்கு குணசேகரன் வீட்டு மருக்கள்மார் வரமாட்டேன் என்று சொன்னதால் குணசேகரன் கோபத்தில் இருக்கின்றார். அப்போது ஜான்சி ராணி மண்டையில ரெண்டு தட்டு தட்டி கூட்டிட்டு வாரேன் நீங்க போங்க என்று சொல்கிறார்.


அப்போது கதிர் நாங்க ஏறுகிற கார்ல நீ ஏறின என்று வைச்சுக்கோ உன்னோட கால் ரெண்டையும் உடைச்சுப்போடுவேன் என்கின்றார்.பின்னர் கோயிலுக்கு போனதும் ஜான்சிராணி உன் பொண்டாட்டி ஒரு புள்ளையை துாக்கிட்டு ஓடி வந்தா, எதையோ ஒளிச்சு வைச்சிருக்கிறாளுகள் என்கின்றார்.

தொடர்ந்து குணசேகரன் பூசாரியிடம் பூஜையை ஆரம்பிக்கச் சொல்கின்றார். மறுபுறம் ஈஸ்வரி ஜீவானந்தம் கூட இருந்து அழுது அழுது பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது கதிர் எழும்பி வருகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement