நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அவர் கழுத்தில் அணிந்திருக்கும் செயினில் உள்ள டாலரை இதய இமோஜியால் மறைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
த்ரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் விஜய்யுடன் அவரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் காரணமாகவும் த்ரிஷா குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த செயினின் டாலர் தெளிவாகத் தெரியாத வகையில் இதய இமோஜியைப் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, அந்த டாலரில் என்ன இருக்கிறது, அதை மறைத்ததற்கான காரணம் என்ன என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அது விஜய்யின் பெயராக இருக்குமோ என்றும் ஊகித்து வருகின்றனர்.
எனினும், அந்த டாலரில் என்ன உள்ளது என்பதற்கோ, அதை மறைத்ததற்கான காரணத்திற்கோ இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இதனால், த்ரிஷாவின் இந்தப் புகைப்படம் குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து வருகின்றன.
Listen News!