• Jan 19 2025

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நிகழப்போவது இது தான்? வெளியான ஷூட்டிங் போட்டோஸ்! கண்கலங்கி பேசிய முத்து

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க  ஆசை. இதில் ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் சந்தோசம்,  பிரச்சனைகள், மற்றும் மாமியார் மருமகள் சண்டை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கதைக்களமாக கொண்டு நகர்வது தான் இந்த சீரியல்.

அதிலும் முக்கியமாக  முத்து மற்றும் மீனா என்ற இரு கதாபாத்திரங்களை வைத்து,  அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில்  முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி, விஜய் டிவி உட்பட பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.


இந்த நிலையில், இன்றைய தினம் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் கண் கலங்கி வாழ்த்து கூறியுள்ளார் வெற்றி. குறித்த காணொளி வைரலாகி உள்ளது.

மேலும், நேற்றைய தினம் முத்துவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், அதில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதும் யூகிக்கப்பட்டுள்ளது.


அதாவது, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை காரணமாக வைத்து, ரவியை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கவும், முத்துவை வைத்து அண்ணாமலை குடும்பத்தை அசிங்கப்படுத்தவும் ஸ்ருதியின் அம்மா பிளான் போட்டு வருகிறார். 

அதேபோல இல்லாத அப்பாவை எப்படி கொண்டு வருவது? விஜயாவுக்கு என்ன பதில் சொல்வது? என ரோகினியும் திண்டாடி வருகிறார்.

இப்படி சில காட்சிகளுடன் தான் இந்த வார கதைக்களம் நகரவுள்ளது என்பதோடு, ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி பெரிய மண்டபத்தில் நடந்துள்ளது. அதில் ஸ்ருதி நகைகளை அள்ளிப் போட்டுள்ளமையும் குறித்த புகைப்படங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.

11


Advertisement

Advertisement