தமிழில் முக்கிய இயக்குநரான லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்றிருப்பதோடு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தில்
விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.
சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு மிகப்பெரிய வரவேற்பும், புகழும் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ் பல பேட்டி கொடுத்து வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இடம் கைதி 2 படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது, கைதி படத்தில் கார்த்தி கையில் ஒரு கட்டப்பை இருக்கும். அதில் இருப்பதெல்லாம் அவர் கபடி விளையாடி ஜெயித்த கோப்பைகள்.
அவர் ஒரு கபடி பிளேயர். ஜெயிலில் இருக்கும் போது அவர் நிறைய போட்டிகளில் வெற்றி பெற்று வாங்கி இருப்பார்.அதைத்தான் அவர் அந்தப் பையில் கட்ட பையில் வைத்திருப்பார். இதை வைத்து தான் அவருடைய கைதி 2 கதை தொடரும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சிலர், கண்டிப்பாக கைதி 2 சரவெடி தான் என்றும் கூறி வருகின்றனர். அடுத்து லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள்
- தனுஷுடன் ரஞ்சினியாக ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் – திருச்சிற்றம்பலம் படத்தின்லேட்ஸ்ட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!