• Jan 18 2025

ஐஸ்வர்யாவுக்கு மட்டுமல்ல ஆதிக்கிற்கும் இது இரண்டாவது திருமணமா?- உண்மையை உடைத்த பிரலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார்.மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படங்கள் பெரிதும் தோல்வியை சந்தித்தன.

தொடர்ந்து விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இப்படம் மெகா ஹிட்டானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால் ஆதிக் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியதோடு அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையிவ் இவர் அண்மையில் நடிகர் பிரபுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.ஐஸ்வர்யாவுக்குத்தான் இது இரண்டாவது திருமணம் என்று சொல்லப்பட்ட சூழலில் ஆதிக்கிற்கும் இது இரண்டாவது திருமணம்தான் என  பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "இப்போதைய காலத்தில் மறுமணம் என்பது ரொம்பவே இயல்பாகிவிட்டது. அதற்கு முதல் விதை போட்டது தந்தை பெரியார்தான். சினிமா நிகழ்வுகளில் இருவரும் அவ்வப்போது பார்த்து பழக்கமானார்கள்.பிறகு இரண்டு பேருக்கும் காதல் வந்துவிட்டது. ஐஸ்வர்யா ஏற்கனவே பிரபுவின் அக்கா மகனை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். 


இது அவருக்கு இரண்டாவது திருமணம். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம்தான். அவரும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 500 கோடி ரூபாய் வரதட்சணையை பிரபு கொடுத்தார் என்பது எல்லாம் சுத்த பொய்.இது இரண்டு பேருக்குமே இரண்டாவது திருமணம். எனவேதான் இந்தத் திருமணத்தை சிம்பிளாக முடித்துவிட்டார்" என்றார்.


Advertisement

Advertisement