• Jan 19 2025

கணேஷுக்கு டாட்டா காட்டிய பாக்கியலக்சுமி அமிர்தவா இது? ரொமான்ஸ் சீனில் வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய நடிகை மற்றும் மாடலிங்கில் பிரபலம் ஆனவர் தான் அக்ஷிதா அசோக். சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலில் தனது முதல் நடிகையாக அறிமுகமானார். 

இதை தொடர்ந்து, அன்பே வா, காற்றுக்கென்ன வேலி, சாக்லேட் மற்றும் சித்தி 2 ஆகியவற்றில் நடித்து பிரபலமானவர். தற்போது பாக்கியலக்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.


தமிழ்நாட்டின் சென்னையில் 25 ஏப்ரல் 2003 அன்று அக்ஷிதா அசோக்  பிறந்தார். தனது சொந்த ஊரிலிருந்தே பள்ளிப்படிப்பையும் முடித்துள்ளார்.

தனது 16 வயதில் இருந்தே தொலைக்காட்சி நடிகையாக காணப்பட்ட இவர், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஸ், வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தி  வருகிறார்.


தற்போது இவர் நடித்து வரும் பாக்கியலக்சுமி சீரியலில், இவரது வாழ்க்கை கேள்விக்கு குறியாக காணப்படுகிறது. எனினும், தனக்கு பிடித்த எழிலுடன் வாழ்ந்து வருகிறார். கணேஷ் என்ன ஆனார் என இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

இந்த நிலையில், தற்போது நடிகை அக்ஷிதா அசோக் பார்ப்போரை சுண்டியிழுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement