• Sep 20 2024

பாரதி கண்ணம்மா சீரியலில் என்ரி கொடுத்த சபரி-அட இவர் தான் வெண்பாவுக்கு ஜோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குநர் பிரவீன் பென்னட் என்பவர் இயக்கி வருகின்றார். இது பிரபல மலையாள சீரியலின் ரீமேக் ஆகும்.

இந்த தொடர் ஆரம்பத்தில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் டல் அடித்தாலும் கண்ணம்மா கையில் பை வைத்துக் கொண்டு வெளியே வந்த ஒரே ஒரு காட்சி தான் ஓஹோ என ஹிட்டடித்தது. அதில் இருந்து தொடருக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது.

தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் வெண்பாவிற்கு அவரது அம்மா தற்பொழுது மாப்பிள்ளை பார்த்து வருகின்றார். ஆனால் வெண்பா அனைத்து மாப்பிள்ளையும் ஓட வைத்து வருகின்றார்.

கடந்த எபிசோடில் நம்ம வீட்டுப் பொண்ணு தொடர் சுஜித் சிறப்பு வேடத்தில் நடித்தார். இப்போது என்னவென்றால் வேலைக்காரன் தொடரில் நடித்துவந்த சபரி பாரதி கண்ணம்மாவில் என்ட்ரீ கொடுத்துள்ளார். அவர் வெண்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க வந்துள்ளார். இது குறித்த புரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement