• May 21 2024

நடிகை ஸ்ருதிஹாசனா இது ?- சினிமாவிற்கு வர முதல் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு, மலையாளம் அகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகள் என்பதோடு பின்னணி பாடகராகவும் வலம் வருகின்றார்.கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றவர் எனலாம்.


மேலும் இவர் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த லாபம் படத்தில் நடித்ததிருந்தார். இப்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


இது தவிர இன்ஸ்டா பக்கத்தில் சமையல், பிட்னஸ் போன்ற விஷயங்கள் பற்றி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அத்தோடு தனது காதலனுடன் தங்கி இருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.


தற்போது இன்ஸ்டாவில் உள்ள ஸ்ருதிஹாசனின் ரசிகர் வைத்துள்ள பக்கத்தில் நடிகை 17 வயதில் இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனா இது என்று கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement