• Jan 19 2025

அதற்கு தான் இப்படியொரு கதையா? அப்போ உங்க கணவர் எங்க போனார்? விசித்ராவை விளாசிய ஷகிலா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் தனது  சினிமா வாழ்க்கையில் இடம்பெற்ற கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை விசித்ரா. இச் சம்பவம் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறிவிட்டது.

இந்த நிலையில், நடிகை ஷகிலாவும், விசித்ராவின் சொன்ன கதை தொடர்பில்  தன்னுடைய விமர்சனத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


'விசித்திரா போன்ற ஒரு வலிமையான போட்டியாளரை நீங்கள் இதுவரை பிக் பாஸில் பார்த்திருப்பீர்களா என்பது எனக்கு தெரியவில்லை.. அப்படி இருக்கும் பொழுது, அவர் எப்படியான பிரச்சினைகளுக்கு ஆளாகி இருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

விசித்ரா ரவீனாவிடம் சொன்ன கதையில், பிற ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண், அந்த காயத்தோடு தான் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.


அதற்கு காரணம் கேட்டால், காவல் நிலைய அதிகாரியிடம் நாம் செல்வதற்கு, நம்மிடம் சான்றுகள் வேண்டும் என்று சொன்னார். அந்த விஷயத்தில் அன்று அவர் செய்த தவறை, அவர் இந்த விஷயத்தின் மூலம் சமன் செய்ய நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முன்னமே வாய்ப்பு கிடைத்த போதே அவர் இதை சொல்லி இருக்கலாமே?

அதை விடுத்து, ஒரு கதை சொல்லல் போன்ற  டாஸ்க் வரும் போது, இதை சொல்ல வேண்டிய காரணம் என்ன..?  அவரது கணவரை அவர் ஹீரோ என்றும் அவர்தான் தன்னைக் காப்பாற்றி கொண்டு போனார் என்று சொன்னார். அப்படியானால், இப்போது ஏன் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தீர்கள்?


அப்போது இந்த மீடியா சினிமாவெல்லாம் வேண்டாம் என்று சொன்ன உங்க கணவர், இப்போ ஏன் உங்களை மீண்டும் இந்த உலகிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்? இதற்கு முன்னதாக சீரியலுக்கு வந்தீர்கள், சீரியலில் இது போன்ற தொந்தரவுகள் இல்லையா கண்டிப்பாக இருக்கிறது..' என்று தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

Advertisement

Advertisement