• Nov 20 2026

சுந்தரி சீரியல் நடிகை கர்ப்பமா? தீயாய் பரவும் போட்டோ.. ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை  கேப்ரில்லா செல்லஸ். சுந்தரி சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த  சீரியலின் இரண்டாவது பாகம் முடிவுக்கு வரவுள்ளது.

நடிகை கேப்ரில்லா செல்லஸ் ஆரம்ப காலத்தில் டிக் டாக், யூட்யூபில் வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். 

d_i_a

மேலும் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களிலும் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை தனதாக்கி கொண்டார். 


இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக சுந்தரி சீரியலின் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், நடிகை  கேப்ரில்லா செல்லஸ் தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறாரக்ள்.



Advertisement

Advertisement