கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வரலாற்று அம்சம் நிறைந்த தொன்மக்கதையை மையமாகக் கொண்டு உருவான படம் தான் காந்தாரா. இந்த படம் 90 ஆம் ஆண்டுகளில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
கன்னடத்தில் இந்த படம் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது.
d_i_a
இந்த படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது ரிஷப் ஷெட்டி பலரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக காணப்படுகின்றார். இவர் அனுமன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து காந்தாரா திரைப்படம் பற்றிய அறிவிப்புக்கள் வெளியானது. அதன் பின்பு எந்த ஒரு அப்டேட்டுகளும் வெளி வராமல் இருந்தது. இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், காந்தாரா படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாகவே படக் குழுவினர் அறிவிப்புபை வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாக உள்ளது. இந்த படம் பற்றிய அப்டேட்டுகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Listen News!