• May 20 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் கதாநாயகி இவர் தானா?- அட இவர் பாலிவூட் நடிகையாச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தினை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்கிற கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வந்தன.

அதன்படி தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் கியாரா அத்வானி இணைவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement