• May 09 2024

திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொன்ன தனுஷ்- எமோஷனலான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தனுஷ், அனிருத், நித்யா மேனன், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நித்யா மேனனுக்கு காலில் அடிபட்டிருந்த நிலையில் அவர் வீல் சேரில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர். இருவரும் வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவும் நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தன்னுடைய தந்தை ஆரம்ப காலத்தில் சென்னைக்கு வந்தபோது பட்ட கஷ்டங்களை குட்டி ஸ்டோரியாக சொன்னார். தன்னை ஹீரோவாக்க நள்ளிரவிலும் சென்று கடன் வாங்கினார்.அவர் தன்னுடைய ரியல் ஹீரோ என்று நெகிழ்ச்சித் தெரிவித்தார்.

https://twitter.com/FilmsLoveLife/status/1553629234752618496

மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை விரைவில் சன் டிவி ஒளிபரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement