• Sep 20 2024

இந்த வாரம் அவுட்டாக போவது நம்ம கண்ணம்மாவா? வெளிய கசிந்த தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


பிக்பாஸ் வீட்டில் இந்த  வாரம் நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில், இந்த வாரம் விணுஷா தான்  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என தகவல் கசிந்துள்ளது. 

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான விணுஷா தன்னை மக்கள் மத்தியில் இன்னும் பிரபலப்படுத்துக்கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.

எனினும், தற்போது மூன்றாவது வாரமே அவர் எலிமினேட் ஆகப்போகிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.  

Advertisement

Advertisement