• Jan 15 2025

அந்தகன் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானதா? 5 நாட்களில் செய்துள்ள மொத்த வசூல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அந்தகன். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியிருந்தார். தனது மகனின் ஐம்பதாவது படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் உரிமையை பல போட்டிகளுக்கு மத்தியில் அவர் வாங்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாத்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது வரையில் நல்ல விமர்சனத்தை பெற்று தியேட்டர்களில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் கூட அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணத்தினாலேயே ரசிகர்கள் தியேட்டர்களில் அலைமோதுகின்றார்கள்.


இந்த நிலையில், தற்போது அந்தகன் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களைக் கடந்துள்ள நிலையில் அதன் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, அந்தகன் கடந்த 5 நாட்களில் உலகளவில் ரூ. 4.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது என தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement