90 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான படங்களில் அழகு, நடை, நடனம், கவர்ச்சி, குரல் என அனைத்திலும் தனித்துவம் காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் சிம்ரன். இவர் ரஜினி, கமல் உட்பட சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர்.
2003 ஆம் ஆண்டு தீபக் பாகாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார் சிம்ரன். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில், தமிழ் சினிமா கொண்டாடி வரும் நடிகைகளில் ஒருவரான சிம்ரன் தற்போது முதன் முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க உள்ளார். அதில் தயாரிப்பு மட்டுமின்றி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி ‘போர் டி மோசன் பிக்சர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்சன் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தினை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷியாம் இயக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பணிகளில் சிம்ரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் தேவயானி, நாசர் உட்பட பலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூடிய விரைவிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!