• Feb 03 2026

'இந்தியன் 2' சிலருக்கு இறுதிப் படமானது! மிகுந்த வேதனையில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'இந்தியன் 2'. இந்த நிலையில் இப்படத்தில் மறைந்த சில நடிகர்களும் இறுதியாக நடித்துள்ளமை பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதோடு, சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ளது.

'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ ஒன்று நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழ் வீடியோ 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.


'இந்தியன் 2' படம் 2019ம் ஆண்டே ஆரம்பமானது. எனினும் கிரேன் விபத்து, கொரோனா  என பல்வேறு தடைகளைக் கடந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்துள்ளது.

இவ்வாறான நிலையில்,  'இந்தியன் 2' படம் தொடர்பில் வெளியான வீடியோவில் மறைந்த நடிகர்கள் சிலரைப் பார்க்கும் போது பலருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.


அதன்படி, அதன் முதற் பாகத்திலேயே தனி முத்திரை பதித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு, காமெடி நடிகர் விவேக், மனோபாலா ஆகியோர் 'இந்தியன் 2' அறிமுக வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். அத்துடன்,  மறைந்த நடிகரான மாரிமுத்துவும் இப்படத்தில் நடித்துள்ளார்.  

இதேவேளை, இப்படத்தில் மறைந்த நடிகர்களாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அவர்களின் கடைசிப் படமாக 'இந்தியன் 2' படம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement