• May 20 2024

“நான் டான்சர் எல்லாம் கிடையாது…” ; நடிகை சாய் பல்லவி ஒப்பன் டாக்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தாம் தூம் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ப்ரேமம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். மலையாள படமாக இருந்தாலும் ப்ரேமம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் கவரப்பட்ட ஒரு படம்.

ப்ரேமம் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சாய்பல்லவி நடித்த ஃபிடா பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனால் தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே சாய் பல்லவி மாறினார் என்று தான் கூற வேண்டும். இப்பொழுது முழு வீச்சில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் நடிகையாக இருந்தாலும் தமிழில் மாரி 2 மற்றும் என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

மேலும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதும் இன்றும் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அத்தோடு நடிப்புக்கு இணையாக சாய்பல்லவியின் நடனத்திற்கும் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருந்தது.

இந்தப் படத்தில் பிற நடிகை நடிகர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் சாய்பல்லவி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாய்பல்லவியின் நடிப்புக்கு மட்டுமல்லாமல் நடனத்திற்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறே ரவுடிபேபி பாடலுக்கு பிறகு மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்க தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார் சாய் பல்லவி நான் டான்சர் எல்லாம் கிடையாது. ஆனால் டான்ஸ் ஆடும் போது சந்தோஷமாக இருக்கும் என கூலாக பதில் அளித்துள்ளார்.

https://www.youtube.com/embed/VD6qNCIqHeA

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement