• May 21 2024

காடு என்ற ஒன்று இருந்தால் ராஜா என்று ஒருத்தர் இருக்க தானே வேணும்- அட்டகாசமாக வெளியாகிய பிக்பாஸ் சீசன் 6 இன் இரண்டாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.தமிழில் இதுவரை 5 சீசன்கள் மட்டும் நிறைவடைந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.இதன் 6வது சீசன் செப்டெம்பர் மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.


அதன்படி ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.மேலும் சமீபத்தில் கமல் நடித்துள்ள பிக்பாஸ் சீசன் 6-ன் புதிய ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோ வந்துள்ளது.

 அதில் கமல் அதிரடியாக விக்ரம் படத்தில் வரும் டயலாக் போல அசத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement